ஒரு கிலோ தக்காளி ₹2ரூபாய்!? கிடுகிடு சரிவு!!
சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ₹150 க்கு விற்ற தக்காளி தற்போது சரிவின் எல்லைக்கு சொன்று கொண்டிருக்கிறது.
இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1,000 டன்களைத் தாண்டும் என்று கூறப்படுகிறது.
இதனால்... விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர்.
உச்சத்தை தொட்ட தக்காளியின் தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
2 மாதங்களுக்கு முன்பு வரை, தக்காளி ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக இருந்தது.
ஆப்பிள், மாதுளை பழங்கள் போன்ற உயர்ந்த கனி வகைகளுடன் போட்டிபோடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தில் இருந்தது.
தினமும் தொலைக்காட்சியில்.. தக்காளியின் மார்கெட் நிலவரம் அறிந்து கொண்டு மக்கள் கடைக்கு செல்லும் சூழல் இருந்ததை மறக்க முடியாது.
ஆனால்... இன்று நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது.
ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாகும்.
அங்கிருந்துதான் தமிழகம், கர்நாடகா, மும்பை, ஒரிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல பகுதிகளுக்கும் தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தக்காளி வரத்து மிகவும் குறைந்த நிலையில் இருந்தபோது.. இந்தியாவின் கார்பரேட் வியாபாரிகள் சிலர், அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபரிகளின் தக்காளிகளையும் கூடுதல் முன்பணம் கொடுத்து வாங்கி.. மிக அதிக கூடுதல் விலைக்கு மார்கெட்டுக்கு அனுப்பி வைப்பதாக குற்றச் சாட்டுகளும் எழுந்தன.
இதனால் தக்காளி விலை கிலோ 200-க்கு மேல் விற்பனையானது. தக்காளி விவசாயிகள் பலர் லட்சாதிபதிகளாகவும், கர்பரேட்டுகள் பல கோடி ரூபாய் இலபம் பெறுபவர்களாகவும் நிலைமை மாறியது.
இதனால் தக்காளி விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியில் ஆட்டம் போட்டனர்.
தக்காளி விற்ற பணத்தை எடுத்துக் கொண்டு வந்த வியாபாரிகளிடம் வழிப்பறி மற்றும் கொலை சம்பவங்களும் பல இடங்களில் அரங்கேறின.
கடையில் புகுந்து தக்காளி திருட்டு தோட்டத்திற்குள் புகுந்து தக்காளி திருட்டு என்று பரபரப்பு சம்பவங்களும் நடந்தேறின.
தற்போது அன்னமய்யா மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தக்காளி அதிகளவு உற்பத்தியாகி மார்க்கெட்டுகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. சித்தூர் பலமனேர் புங்கனூர் பகுதிகளில் இருந்தும் அதிகளவு தக்காளி வரத்தொடங்கிவிட்டது.
சில நாள் முன்பு வரை 90 டன்னுக்கும் குறைவான வரத்து இருந்த தக்காளி இப்போது தினமும் 300 டன்னுக்கும் அதிகமாக வரத்தொடங்கி உள்ளது.
இதனால் தற்போது கடைகளில் கிலோ ரூ.8முதல் ரூ.10வரை விற்பனை ஆகிறது.
அன்னமய்யா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது தக்காளி காய்களாக உள்ள தக்களிகள் இன்னும் 2 வாரத்தில் பழமாக மாறிவிடும்.
அதனால் இன்னும் 10நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1,000 டன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது தக்காளி ஒரு கிலோ விலை ரூ.2-க்கும் குறைவாக இருக்கும் என வியாபாரிகள் கணித்துள்ளனர்.
கொஞ்ச ஆட்டமாடா போட்டீங்க...? இப்போ உங்க நிலைமையை பார்த்தீர்களா? என்று சமூக வலைதளங்களில் தற்போது பதிவுகள் வைரலாகி வருகிறன.