வேண்டுதல் பலிக்காததால் சிவலிங்கத்தை கடத்திச் சென்ற பக்தர்

வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை எனவே  சிவலிங்கத்தை கடத்தினேன்.
- விரக்தியின் உச்சத்தில் உ.பி வாலிபர் 




கைது செய்யப்பட்ட சோட்டு



தனது வேண்டுதல் எதுவும் பலிக்காததால்  கோவில் சிவலிங்கத்தை வேரோடு பிடுங்கி கடத்தியதால் உ.பி  வாலிபர் கைது செய்யப்பட்டார்!


தனது வேண்டுதல்படி மனைவி கிடைக்காத ஆத்திரத்தில் கோவிலில் இருந்து சிவலிங்கத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் உ.பி'யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரப்பரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டு(27). தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும், நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தினமும்  அங்குள்ள   சிவன் கோவிலுக்கு சென்றுு  சாமியிடம் கேட்டு வந்துள்ளார். 

அதோடு தனது பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்பதால்  தினமும் நிறைய  பூஜைகளையும் செய்து வந்துள்ளார். 


தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அதிக பணம் செலவழித்து பல்வேறு சடங்குகளையும் கேவிலில்  செய்து வந்துள்ளார்.



இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த கிராம மக்கள், சிவலிங்கம் திடீரென  காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.


இதுகுறித்து கோவில் பூசாரி, மஹேவாகார் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்த போது, சோட்டு தான் அந்த சிவலிங்கத்தை திருடிச் சென்றுள்ளார் என்று தெரிய வந்தது.


இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். போலீஸ் விசாரணையில்... தனது வேண்டுதல் எதற்கும் இந்த சிவலிங்கம் செவிசாய்க்காமல் ஏமாற்றி விட்டதாக கூறி போலீசாரை அதிர விட்டார்.


இந்த சம்பவம் உ.பி மாநிலத்தில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

.......

https://youtu.be/BzNNEAi2els 
.......