தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி! மலையேறும் சந்திரசேகர் ராவ் ஆட்சி! நான்காம் இடத்தில் பாஜக!
வெளியானது கருத்துக்கணிப்பு முடிவுகள்.!
தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் அபார வெற்றி பெறும்.!
டிசம்பர் மாதம் நடைபெற உள்ள தெலங்கானா மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தெலங்கானாவில் பாரத் ராஷ்ட்ரிய சமிதியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவ் முதல்வராக உள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் டிசம்பர் மாதத்தில் தெலங்கானா சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் பாரத் ராஷ்டிரிய சமிதி கட்சியே வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்திருக்கிறது.
தற்போதைய சட்டமன்றத்தில் சந்திரசேகர ராவ் கட்சிக்கு 100 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இது தவிர...
ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 7பேரும், காங்கிரஸ் கட்சிக்கு 6பேரும், பாஜகவுக்கு 3பேரும் மற்றவர்களுக்கு 3பேரும் என 19பேர் அங்கே எதிர்தரப்பு எம்எல்ஏக்களாக உள்ளனர்.
டிசம்பரில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்கூட்டி இப்போதே தயாராகி விட்டார் சந்திரசேகரராவ்.
தேர்தல் தேதியே அறிவிக்கப்படாத நிலையில் மொத்தமுள்ள 119தொகுதிகளில் 115தொகுதிகளுக்கு வேட்பாளர்களையும் அறிவித்து பணிகளை தொடங்கி விட்டார்.
பல தொகுதிகளிலும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர்களையே மீண்டும் வேட்பாளராக அறிவித்துள்ளார்.
அங்கே தேர்தல் நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ள நிலையில் போல் டிராக்கர் (poll Tracker) சார்பில் தெலங்கானா சட்டசபை தேர்தல் தொடர்பாக மாநிலம் முழுவதும் கருத்து கணிப்பு நடந்தது.
ஜூலை 1ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரையிலும் இரண்டு மாதங்கள் தொடர்ந்து நடந்த இந்த கருத்து கணிப்பில் மொத்தம் 1 லட்சத்து 23 ஆயிரத்து 580 பேர் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர்.
தற்போது அந்த கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்... தெலங்கானாவின் தற்போதைய முதல்வர் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை இழக்கும்.
தனி மெஜாரிட்டியுடன் அங்கே காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சி 42 சதவீத ஓட்டுகளை பெற்று 63 to 69 தொகுதிகளை வென்று ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய முதல்வரான சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி 34 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பெற்று,
35 to 40 தொகுதிகளில் மட்டுமே வென்று ஆட்சியை இழக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கணிப்பு சரியாக இருக்கும் பட்சத்தில் தெலங்கானாவில் முதல் முறையாக ஆட்சி மாற்றம் என்பது நிகழும்.
அதேபோல் அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 10சதவீத வாக்குளை பெற்று 3 முதல் 6 தொகுதிகளை கைப்பற்றும் என்றும்,
பாஜக 9சதவீத வாக்குகளை பெற்று 3 to 5 தொகுதிகளிலும்,
மற்றவர்கள் 5 சதவீத ஓட்டுகள் பெற்று 2 முதல் 6 தொகுதிகள் வரை கைப்பற்றலாம் என்றும் 'போல் டிராக்கர்' கருத்து கணிப்பின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.