தாழ்த்தப்பட்டவர்களை இனி சக மனிதர்களாக மதிக்க உள்ளோம்! - மோகன் பகவத்
RSS அமைப்பின் தலைவரான மோகன் பகவத் நாக்பூரிலிருந்து இன்று ஒரு வித்தியாசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
மனுதர்ம அடிப்படையில்
கடந்த 2000 வருடமாக தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி.. நாம் அவர்களை ஒதுக்கியே வைத்துவிட்டோம்.
இனிமேலும் நாம் அப்படி ஒதுக்கி வைக்க கூடாது, அவர்களுக்கு சமத்துவம் கிடைப்பதை ஆதரிக்க வேண்டிய நிலையில் தற்போது நாம் இருக்கிறோம்.
அரசியலமைப்பு சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இனிமேல் ஆதரிக்கும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை 2024 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அவர் வெளியிட்டாரா? அல்லது உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு காரணமாக உண்மையிலேயே மனம் திருந்தி வெளியிட்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
வெறும் 3% மட்டுமே உள்ள பிராமணர்கள் நீதிமன்ற நீதிபதிகளாக 80% பேர் இடம் பெற்றுள்ளனர். மற்றும் அரசின் பலதரப்பட்ட உயர் பதிவிகளிலும் அவர்களே அதிக அளவில் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட மக்களை மதத்தால் இந்துக்கள், தங்கள் இனத்தவர்கள் என்று கூறினாலும், அரசு பதவிகளில் கீழ் நிலை பணிகள் மட்டுமே அவர்களுக்கு வழங்கப்படுகிறது, அவர்களை உயர் பதவிகளுக்கு வரவிடாமல் அரசு எந்திரத்தை கட்டுப்படுத்தி வைக்கும் அதிகார மையமாக நாக்பூரின் RSS அமைப்பு திகழ்கிறது.
எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் RSS அமைப்பின் நிர்வாகிகளே அரசின் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரிகளாக உள் நுழைந்து விட்டதால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இதுவரையும் சரியான விடிவுகாலம் ஏற்படாமல் தடுக்கப்பட்டு வந்துள்ளது.
மோகன் பகவத் திடீரென இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும் அரசு உயர் பதவியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த வாதிகள் அதை ஏற்கமாட்டார்கள் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
அல்லது தனது வெளிப்படையான இன்றைய அறிவிப்புக்கு எதிராக அவரே ரகசிய சுற்றறிக்கை ஒன்றையும் தனது அமைப்பினருக்கு அனுப்பி அது ஒரு நாடக அறிவிப்பு யாரும் நம்பிட வேண்டாம் என்றும் கூறிடவும் வாய்ப்புகள் உள்ளன என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.