சனாதனம் நிலைத்திருக்க மக்களின் மடமையே காரணம்!




ஓர் அமெரிக்க வாழ் இந்தியப்
பார்ப்பனரை அமெரிக்க நிருபர் பேட்டி கண்டார். 


நிருபரின் கேள்வி :

உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்ப்படும், ஏற்பட்டும் உள்ளது... 
ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நபர்களை (BC,MBC,SC,ST) உங்களுக்குக் கீழேயே வைத்துள்ளீர்கள், 

அவர்களின் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது. உங்ஙகளது எண்ணிக்கை 3% ஆக உள்ளது, இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராகவோ பிராமணியத்திற்கு 
எதிராகவோ அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லையே ஏன்..?


பார்ப்பனரின் பதில் :

பிராமணர் அல்லாத அவர்கள் சுயமாக ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் அந்த  குழந்தைக்கு நாங்கள் இஎல்லாம் பெயர் வைக்க முடியாது.

அவர்களால் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் வந்து கிரஹப்  பிரவேஷம்  செய்யாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது.

அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமணத் தேதியை
முடிவு செய்யவோ, நாங்கள் இன்றித்
திருமணம் நடத்தவோ முடியாது.

அவர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள் இல்லாமல் அதைத் தொடங்க முடியாது. 

வாழ்க்கையின் எந்த முடிவையும் தாங்களாக எடுக்க முடியாதவர்கள் அவர்கள்..

நன்மை தீமை பற்றி எந்த அறிவும் இல்லாதவர்கள் ..

இன்றும் உழைப்பையும் அறிவையும் விடக் கடவுளையும் எங்களையுமே நம்புகிறவர்கள் ..

நாய் பூனை, மரம் செடிகள், விதை கருங்கல் போன்றவற்றில் ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்கள் ..
 
பிறப்பிலிருந்து கல்வி வருவதாக நம்புவார்கள்...

வருமானத்தை அதிர்ஷ்டமாக கருதுகிறார்கள் ..

நோயை தெய்வத்தின் கோபம் என்று நம்புபவர்கள் .. 

இதைக் கேட்ட நிருபர் திகைத்துப் போனார்.

இன்னும் இருக்கு கேளுங்க என்றார் பார்ப்பனர்.

வேதங்களை படிப்பது பாவம் என்று நாங்கள் கூறுவதை நம்பி... 
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எங்கள் ஆலோசனைகளைத் தான் இன்னும் வேதமாக நினைத்து கேட்கின்றனர், 



எங்களால் உருவாக்கப்பட்ட சடங்கு, சம்பிரதாயங்களைத் தான் கடைபிடிக்கின்றனர்.

ஜாதகத்தையும் ஜோசியத்தையும் நம்ப வைத்துள்ளோம். 

எனவே, எங்கள் மீது கோபம்  வராதபடி நாங்கள் மதத்தையும், கடவுள்களையும் பயன்படுத்திப் பார்த்துக்கொள்கிறோம்.

மிக முக்கியமான உண்மை, இந்துமதம் என்பது பிராமணர்களால்  3% பிராமணர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மதம் மட்டுமே

ஆனால், இந்து மதத்தை இந்தியாவின் மதம் என்றும், இந்திய மக்களின் வாழ்க்கை முறை என்றும், சுதந்திரமான மதம் என்றும் நாங்கள் நம்ப வைத்துள்ளோம். 

சனாதனம் என்ற பெயரில் ஜாதிகளுக்கு தக்கபடி நீதியை மாற்றியுள்ளோம்.

எங்களால் கற்பிக்கப்பட்ட பெரிய கடவுள்களின் பிடியிலிருந்து தங்களை நீக்கிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. வேறு மதத்திற்கு மாறவும் அவர்கள் தயாராக இல்லை. 

இந்த நிலைமை தொடரும் வரை பிராமணர் அல்லாத 85% மக்கள்  எங்களுக்கு அடிமையாகத்தான்  இருப்பார்கள். 

பேட்டி கண்ட அமெரிக்க நிருபருக்கு முகமெல்லாம் வியர்த்துப் போனது!!

.