Posts

Image
EN The Technology Behind Disposable Email Addresses
Kumari FM https://etextpad.com/raw/dd1hqnfszv https://kit.fontawesome.com/bb239d3fa1.js

பாபர் மசூதி வரலாறு

Image
பாபர் மசூதியின் வரலாறு என்ன? 1524-ல் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் அபோதையை டில்லி நாட்டு மன்னரான #இப்ராஹிம்லோடி ஆவார். அவர் அப்பணியை ஏனோ தொடரவில்லை. பின்னர், கிபி 1526-ல் முதலாம் #பானிபட் போரில், இப்ராஹிம் லோடியைக்கொன்றுவிட்டு டில்லி சாம்ராஜ்ஜியத்தை கைப்பற்றிய #காபூல் நாட்டு மன்னர் #பாபர்...காபூல், டில்லி, பாடலிபுத்திரம் (பாட்னா) வரை விரிந்து பரந்த முகலாய சாம்ராஜ்ஜியத்தின் முதல் மன்னராகிரார்.  (சங்கிகளின் 'அகண்ட் பாரத்'தில் காபூலும் பாரதத்தின் ஒரு பகுதிதான். ஆகவே, இப்ராஹிம் லோடியை போல... பாபரும் பாரதத்தின் தவப்புத்தல்வன்தான்)  பின்னர், 1528-ல் அயோத்தி வந்த #மீர்பாஹி எனும் முஹலாய படைத்தளபதி... அந்த அடித்தளத்தின் மீது மசூதியை மேற்கொண்டு கட்டி டூம்கள் கொண்ட கூரைகள் அமைத்து பூர்த்தியாக்கிய பாபரின் தளபதி மீர்பாஹி... மஸ்ஜிதுக்கு பாபர் பெயரை வைத்தார். எனவே 'ராமர் கோவிலை பாபர் இடித்தார்' என்று சங்கிகள் கூறியது உலகமகா பெரும்பொய் என்பது, இதன் மூலமும் தெள்ளத்தெளிவாகிறது. அப்படின்னா... ■★◆● 'இப்ராஹீம் லோடிதான் ராமர் கோயிலை இடித்தார்' என்றல்லவா பிரச்சினையை இந்த காவிக்க...

சனாதனம் நிலைத்திருக்க மக்களின் மடமையே காரணம்!

Image
ஓர் அமெரிக்க வாழ் இந்தியப் பார்ப்பனரை அமெரிக்க நிருபர் பேட்டி கண்டார்.  நிருபரின் கேள்வி : உலகில் யாராவது சுரண்டப்பட்டால், சுரண்டப்பட்டவர்களால் ஒரு புரட்சி ஏற்ப்படும், ஏற்பட்டும் உள்ளது...  ஆனால் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக இந்தியாவில் ஒடுக்கப்பட்ட நபர்களை (BC,MBC,SC,ST) உங்களுக்குக் கீழேயே வைத்துள்ளீர்கள்,  அவர்களின் எண்ணிக்கை 85%. ஆக உள்ளது. உங்ஙகளது எண்ணிக்கை 3% ஆக உள்ளது, இன்னும் அவர்கள் மீது செய்யப்படும் சுரண்டலுக்கு எதிராகவோ பிராமணியத்திற்கு  எதிராகவோ அவர்கள் ஏன் புரட்சி செய்யவில்லையே ஏன்..? பார்ப்பனரின் பதில் : பிராமணர் அல்லாத அவர்கள் சுயமாக ஒரு குழந்தையை உருவாக்க முடியும், ஆனால் அந்த  குழந்தைக்கு நாங்கள் இஎல்லாம் பெயர் வைக்க முடியாது. அவர்களால் வீடுகளை கட்ட முடியும். ஆனால் நாங்கள் வந்து கிரஹப்  பிரவேஷம்  செய்யாமல் அவர்கள் தாங்களாகவே வீட்டிற்குள் நுழைய முடியாது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் நாங்கள் இல்லாமல் திருமணத் தேதியை முடிவு செய்யவோ, நாங்கள் இன்றித் திருமணம் நடத்தவோ முடியாது. அவர்கள் எந்த வியாபாரத்தையும் செய்ய முடியும், ஆனால் நாங்கள்...

தாழ்த்தப்பட்டவர்களை இனி சக மனிதர்களாக மதிக்க உள்ளோம்! - மோகன் பகவத்

Image
RSS அமைப்பின் தலைவரான மோகன் பகவத் நாக்பூரிலிருந்து இன்று ஒரு வித்தியாசமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். மனுதர்ம அடிப்படையில்  கடந்த 2000 வருடமாக  தாழ்த்தப்பட்டவர்கள் என்று கூறி.. நாம் அவர்களை ஒதுக்கியே வைத்துவிட்டோம்.  இனிமேலும் நாம் அப்படி ஒதுக்கி வைக்க கூடாது,  அவர்களுக்கு சமத்துவம் கிடைப்பதை ஆதரிக்க  வேண்டிய நிலையில் தற்போது நாம் இருக்கிறோம். அரசியலமைப்பு சட்டத்தில் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இனிமேல் ஆதரிக்கும் என்று   தனது அறிக்கையில் கூறியுள்ளார். இந்த அறிவிப்பை 2024 பாராளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அவர் வெளியிட்டாரா? அல்லது  உதயநிதியின் சனாதன ஒழிப்பு பேச்சு காரணமாக உண்மையிலேயே மனம் திருந்தி வெளியிட்டாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.  வெறும் 3% மட்டுமே உள்ள பிராமணர்கள்  நீதிமன்ற நீதிபதிகளாக 80% பேர் இடம் பெற்றுள்ளனர். மற்றும் அரசின் பலதரப்பட்ட உயர் பதிவிகளிலும் அவர்களே அதிக அளவில் உள்ளனர்.  தாழ்த்தப்பட்ட மக்களை  மதத்தால் இந்துக்கள், தங்கள் இனத்தவர்கள் என்று கூறினாலும், அர...

ஒரு கிலோ தக்காளி ₹2ரூபாய்!? கிடுகிடு சரிவு!!

Image
சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ  ₹150 க்கு விற்ற தக்காளி தற்போது சரிவின் எல்லைக்கு சொன்று கொண்டிருக்கிறது. இன்னும் 10 நாட்களில் ஆந்திரா மார்க்கெட்டுகளுக்கு தினமும் தக்காளி வரத்து 1,000 டன்களைத் தாண்டும் என்று கூறப்படுகிறது. இதனால்... விவசாயிகள் பெரிதும் கவலையடைந்துள்ளனர். உச்சத்தை தொட்ட தக்காளியின் தற்போது விலை சரிந்துள்ளதால் சமூக வலைதளங்களில் இதனை பலரும் கிண்டல் செய்து வருகின்றனர். 2 மாதங்களுக்கு முன்பு வரை, தக்காளி ஏழைகளுக்கு எட்டாத கனிகளில் ஒன்றாக இருந்தது. ஆப்பிள், மாதுளை பழங்கள் போன்ற உயர்ந்த கனி வகைகளுடன்  போட்டிபோடும் அளவிற்கு தக்காளி விலை கடும் உச்சத்தில் இருந்தது. தினமும் தொலைக்காட்சியில்..  தக்காளியின் மார்கெட் நிலவரம் அறிந்து கொண்டு மக்கள் கடைக்கு செல்லும் சூழல் இருந்ததை மறக்க முடியாது. யாரெல்லாம் காய்கறி கடையில் அதிக தக்காளி வாங்குகிறார்கள் என்று வருமான வரித்துறை கண்காணித்து வருகிறது என்கிற மீம்ஸ்களும் வலைதளங்களில் பறந்தன. ஆனால்... இன்று நிலைமையே தலைகீழாக மாறியுள்ளது. ஆந்திராவின் அன்னமய்யா மாவட்டம்தான் ஆசியாவிலேயே மிகப்பெரிய தக்காளி சாகுபடி பகுதியாகும். அங...

துணைவேந்தர் பதவி குறித்து ஆளுநர் ரவி சர்ச்சை அறிவிப்பு

Image
சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாக கல்வி அமைச்சர் பொன்முடி அறிவிப்பு. 

அம்பானியின் வரலாறு

Image
அம்பானியின் வரலாறு 10 பகுதிகள் நன்றி : நாணயம் விகடன் .

வேண்டுதல் பலிக்காததால் சிவலிங்கத்தை கடத்திச் சென்ற பக்தர்

Image
வேண்டுதல் எதுவும் பலிக்கவில்லை எனவே  சிவலிங்கத்தை கடத்தினேன். - விரக்தியின் உச்சத்தில் உ.பி வாலிபர்  கைது செய்யப்பட்ட சோட்டு தனது வேண்டுதல் எதுவும் பலிக்காததால்  கோவில் சிவலிங்கத்தை வேரோடு பிடுங்கி கடத்தியதால் உ.பி  வாலிபர் கைது செய்யப்பட்டார்! தனது வேண்டுதல்படி மனைவி கிடைக்காத ஆத்திரத்தில் கோவிலில் இருந்து சிவலிங்கத்தை வாலிபர் திருடிச் சென்ற சம்பவம் உ.பி'யில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பரதேச மாநிலம், கௌசாம்பி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சோட்டு (27). தனக்கு விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்றும், நல்ல மனைவி அமைய வேண்டும் என்று தினமும்  அங்குள்ள   சிவன் கோவிலுக்கு சென்றுு  சாமியிடம் கேட்டு வந்துள்ளார்.  அதோடு தனது பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என்பதால்  தினமும் நிறைய  பூஜைகளையும் செய்து வந்துள்ளார்.  தனக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக அதிக பணம் செலவழித்து பல்வேறு சடங்குகளையும் கேவிலில்  செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கோவிலுக்கு சாமி கும்பிட வந்த கிராம மக்கள், சிவலிங்கம் திடீரென...

இருள் சூழ்ந்ததால்... உறக்கத்தில் ஆழ்ந்த விக்ரம் லேண்டர்.

Image
விக்ரம் லேண்டர் மீண்டும் உயிர்த்தெழப் போவது எப்போது?  சந்திரயான் - 3:  நிலவின் தென் துருவத்தில் இருள் சூழ்ந்ததால்... தற்போது விக்ரம் லேண்டர் உறக்க நிலைக்கு சென்றுள்ளது. அங்கே வெளிச்சம் வரும்போது மீண்டும் அது செயல்படத் துவங்கும் என்றும் நம்பப்படுகிறது.  அமெரிக்கவின் நாசா  விண்வெளி ஆய்வு நிறுவனம்  நிலவின் மீது தரையிறங்கிய சந்திரயான்-3 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் புகைப்படத்தை எடுத்து  வெளியிட்டுள்ளது.  நாசா வெளியிட்டுள்ள  இந்தப் புகைப்படத்தில் விக்ரம் லேண்டர் ஒரு சிறிய புள்ளியாகத் தெரிகிறது. அதனைச் "சுற்றியுள்ள இடத்தில் பிரகாசமான ஒளிவட்டத்திற்கு அருகே அதன் இருண்ட நிழல் தெரிகிறது" என்று நாசா  தெரிவித்துள்ளது. சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர் கடந்த ஆகஸ்ட்-23 அன்று நிலாவில் அதிகம் ஆய்வு செய்யப்படாத தென் துருவத்தில் தரை இறங்கியது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து, நிலாவைச் சுற்றிவரும்... நாசாவின்  லூனார் ரீகனைசன்ஸ் ஆர்பிட்டரில் உள்ள கேமரா இந்தப் புகைப்படத்தை எடுத்ததாக நாசா  தெரிவித்துள்ளது!  கடந்த மாதம், விக்ரம் லேண்டர் - பிரக்யான...